முக்கிய செய்திகள்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு விஜயேந்திரர் எழுந்து நிற்காதது ஏன் தெரியுமா?

காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடும் போது எழுந்து நிற்காத காரணம் என்ன?இதைப் படித்தால் புரியும்.

“அந்த நாளுக்கான மாலை நேர பூஜைகளுக்காக மடம் தயாராகிக் கொண்டிருந்தது. மகா பெரியவர் ஸ்நானம் முடித்திருந்தார். மதியம் சிறிது நேரம் தூங்கினால் கூட ‘மடி’ அதாவது ஆச்சாரம் போய் விடும். மறுபடியும் குளித்தாக வேண்டும். அந்த வகையில் ….. குளித்து முடித்துவிட்டிருந்தார் மகா பெரியவர்.
அந்த நேரமாய்ப் பார்த்து ஒரு சில பக்தர்கள் அவரைப் பார்த்தே தீருவது, அருளாசி பெற்றே தீருவது என்று காத்திருந்தார்கள். அவர்களில் … நாட்டுக் கோட்டை செட்டிநாட்டிலிருந்து வந்திருந்த அருணாசலம் என்ற பக்தர் …. மகாபெரியவரைப் பார்த்து அவரிடம் அருள்மொழிகள் வாங்கி விட்டுத்தான் போவது என்ற உறுதியோடு இருந்தார்.

அந்த நேரம் நானும் மடத்தில் இருந்ததால், அருணாசலத்திடம் சொன்னேன்… ‘இதோ பாரப்பா, நீ இன்றைக்கு மகா பெரியவரைப் பார்க்க முடியாது. நாளைக்கு வாயேன்’…. என்றேன்.

‘இல்லை சாமி, இப்பவே அவரைப் பார்க்கணும்’- என்றார் பக்தர்.
எங்கள் பேச்சுச் சத்தத்தைக் கேட்ட சிலர் …. விஷயத்தை மகாபெரியவரிடம் சொல்ல அலர் என்னை உள்ளே அழைத்தார்.

போனேன். கேட்டார். சொன்னேன். ‘இதோ பாரும் தாத்தாச்சாரி …. அவரைப் பாக்கறதுக்கு நேக்கு ஒண்ணுமில்லே… பாத்தால் ஏதாவது கேப்பார், பதிலுக்கு நான் தமிழ் பேச வேண்டிவரும். நோக்குதான் தெரியுமே… தமிழ் பேசினால் எனக்கு தீட்டு. மறுபடியும் ஸ்நானம் பண்ணனும். பூஜைக்கு நேரமாயிடுத்தோல்யோ… அதானாலே நான் மௌனம் அனுஷ்டிக்கிறேன்னு சொல்லி அனுப்ச்சிடுங்கோ’…
என என்னோடு சமஸ்கிருத சம்பாஷணை நிகழ்த்தினார் மகா பெரியவர்.

நானும் வெளியே வந்தேன். ‘நான் சொன்னதுதானப்பா. சுவாமிகள் மெளனத்தில இருக்கார். நாளைக்கு வாயேன்’ என்றேன்.

‘அப்படியா ? தெய்வத்தை இன்னிக்கே பார்க்கலாம்கற எதிர்பார்ப்போட வந்தேன்.சரி… நாளை வரை ஏதும் சத்திரத்தில் தங்கிவிட்டு வர்றேன்’ – என தாய் மொழியாம் தமிழில் மகா பெரியவரை தெய்வமாக மதித்து ஆதங்கப்பட்டுக் கொண்டே சென்றார் அருணாசலம்.

“(இந்து மதம் எங்கே போகிறது?- அன்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் – பக்கம் 99 – 100, ஒ நக்கீரன் வெளியீடு)

வாட்ஸ்ஆப் பகிர்வில் இருந்து…