முக்கிய செய்திகள்

16 வயதிற்கு கீழ் தான் போக்சோ சட்டம் : உயர்நீதிமன்றம் யோசனை..

16 வயதுக்கு மேற்பட்ட இளம் சிறார்கள் விருப்பப்பட்டு உறவு கொண்டால் குற்றமாக கருதாமல் விலக்கு அளிக்கும் வகையில் போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி போக்ஸோ சட்டம் குறித்து மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு தரப்பில் அறிக்கைகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

அப்போது, போக்ஸோ சட்டத்தை விளம்பரபடுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும், அதுதொடர்பான குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருவதாக வேதனை தெரிவித்த நீதிபதி,

வளர் இளம் பருவ உறவு பற்றி எடுக்கப்படும் திரைப்படங்களை திரையிடும் போது, அதில் போக்ஸோ சட்டம் குறித்த எச்சரிக்கையை இடம்பெற செய்ய வேண்டுமென உத்தரவிட்டார்.

18 வயதுக்கு கீழான ஆண்-பெண் காதல் திருமணம் செய்யும் போது, போக்ஸோ சட்டம் பயன்படுத்தப்படுவதாகவும், இதை தடுக்க 18 வயது வரை சிறுமிகள் என வரையறுத்துள்ளதை 16 வயதாக குறைக்க வேண்டும் என நீதிபதி யோசனை தெரிவித்துள்ளார்.

மேலும் சமூகத்தின் பிணியாக மாறியுள்ள போக்ஸோ குற்றங்கள் பெருகுவதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்ய மனநல ஆலோசகர்கள், சமூக ஆர்வலர்கள் அடங்கிய உயர்மட்ட குழுவை அமைக்கவும் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே கள்ளகாதல் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஒன்று கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.