
1987 இடஒதுக்கீடு கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த 21 சமூக நீதிப்போராளிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் கட்டப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ரூ.4 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் கட்டப்படும் என்றும் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்தார்.
21 பேரின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.