2ஜி வழக்குகளை 6 மாதத்தில் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..


2ஜி வழக்குகள் அனைத்தையும் வரும் 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என சி.பி.ஐ., மற்றும் அமலாக்க துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் இந்த வழக்கு இன்று( மார்ச் 12) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது;

சி.பி.ஐ.,யும், அமலாக்க துறையும் இந்த விஷயத்தில் நாட்டு மக்களை நீண்ட நாட்களுக்கு இருட்டில் வைத்து இருக்க முடியாது. இந்த விவகாரம் நாட்டுக்கு மிகவும் முக்கியமானது. இந்த வழக்குகளில் ஏன் இன்னும் விசாரணை முடியவில்லை என்பதை மக்கள் அறிய வேண்டும். இந்த வழக்கு விசாரணையின் போக்கு குறித்து நாங்கள் மிகவும் கவலை அடைந்துள்ளோம்; மிகவும் அதிருப்தி அடைந்துள்ளோம். எனவே, 2 ஜி தொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். விசாரணையில் ஒரு விஷயத்தை கூட விட்டு விட கூடாது.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர். மேலும், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக துஷார் மேத்தா நியமனத்தை எதிர்த்த மனுவையும் தள்ளுபடி செய்தனர்.