முக்கிய செய்திகள்

2.44 காரணி ஊதிய உயர்வை ஏற்க சம்மதம்: உயர்நீதிமன்றத்தில் தொழிற்சங்கங்கள் தகவல்..


ஊதிய உயர்வு காரணியை ஏற்க சம்மதம் என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் 7வது நாளாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதில், 2.57 ஊதிய உயர்வு காரணி முன்வைக்கப்பட்ட நிலையில், அரசு 2.44 காரணியை மட்டும் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. இதனை ஏற்க மறுத்து தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்றைய விசாரணையில் பிரச்சனையை விசாரித்து தீர்க்கலாம்.
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது.