2 அல்லது 3 நாட்களில் திமுக வேட்பாளர் பட்டியல்..

sமக்களவை தேர்தலில் திமுக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் பட்டியல் 2, 3 நாட்களில் அறிவிக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திராவிட இயக்க தமிழர் பேரவை, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, இந்திய சமூக நீதி இயக்கம், உழவர் உழைப்பாளர் கட்சி என,

பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள் அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுக கூட்டணிக்கு தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து பேசுவதற்காக காங்கிரஸ் சார்பில் இன்றைக்குள் குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

அந்தக் குழுவுடன் பேச்சு நடத்தி காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் இறுதிசெய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து, திமுக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் யார் யார் என்பது இரண்டு, மூன்று நாட்களில் அறிவிக்கப்படும் எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.