
ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில் வங்கி அதிகாரிகள் ரூ.2,000 நோட்டுகளை வைத்திருப்போர் அவற்றை தங்களது சொந்த வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.
ரூ.2,000 நோட்டுகள் வைத்திருப்போர் தங்களது சேமிப்புக் கணக்கு மட்டுமின்றி, வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கும் கட்டுப்பாடுகள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.