
2009 மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட ப.சிதம்பரத்தின் வெற்றி செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ப.சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ராஜகண்ணப்பன் தரப்பில் முன்வைக்கப்பட்ட குற்றசாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என நீதிபதிகள் கூறியுள்ளனர்.