முக்கிய செய்திகள்

2018-19 தமிழக பட்ஜெட் : மகளிர் சுகாதார திட்டத்தில் சானிட்டரி நாப்கின் வழங்க ரூ.60.58 கோடி ஒதுக்கீடு​..


தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக அரசின் வருவாய் ரூ. 1.81 லட்சம் கோடி,செலவு ரூ. 2. 04 லட்சம் கோடி, பற்றாக்குறை ரூ. 23 ஆயிரத்து 176 கோடி என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது

மகளிர் சுகாதார திட்டத்தில் சானிட்டரி நாப்கின் வழங்க ரூ.60.58 கோடி ஒதுக்கீடு​ செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறைக்கு ரூ.11,638.44 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இணைய வழி குற்றங்களை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் இணைய வழி குற்றத்தடுப்பு காவல் நிலையம் அமைக்கப்பட உள்ளது.

அத்திகடவு அவிநாசி திட்டத்திற்கு 1,789 கோடி ரூபாய்

மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு 1361.60 கோடி ஒதுக்கீடு

நாட்டிலேயே குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவான மாநிலங்களில் இரண்டாவது  இடத்தில் தமிழகம் உள்ளது.

இலவச கட்டாயக் கல்வித் திட்டத்திற்கு 200.70 கோடி ரூபாய் ஒதுக்கீடு

ள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த 333.36 கோடி ரூபாய் ஒதுக்கீடு

அணைகள் புனரமைப்புக்கு 166.08 கோடி ஒதுக்கீடு

அத்திகடவு அவிநாசி திட்டத்திற்கு 1,789 கோடி ரூபாய் ஒதுககீடு. இதற்கான அனுமதி விரைவில் வழங்கப் படும்.

வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ரூ.20 கோடி

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ரூ.20 கோடி

நிதி ஒதுக்கீடு சுகாதாரத்துறைக்கு ரூ.11,638 கோடி நிதி ஒதுக்கீடு

மாற்றுத்திறனாளிகள் சுய வேலைவாய்ப்பை ஊக்குவிக்க நிதி ரூ.10,000 இல் இருந்து 25,000 ஆக உயர்வு

சத்துணவுத் திட்டத்துக்கு சமூக நலத்துறை வாயிலாக ரூ.5,611.62 கோடி ஒதுக்கீடு

தரங்கம்பாடி அருகே 220 கோடி ரூபாயில் மீன் பிடி துறைமுகம்

2018-19 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் வடசென்னைக்கான வெள்ள தடுப்பு மேலாண்மைக்கு ரூ.3,243 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.