2018 புத்தாண்டை கோலாகலத்துடன் வரவேற்று மக்கள் கொண்டாட்டம்..

2018 புத்தாண்டு கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் களை கட்டியது. பொதுமக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்லி தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

புத்தாண்டு என்றால், புதிய நாட்கள் மட்டும் பிறக்கவில்லை… அன்றைய இரவில் அலங்கரிக்கப்பட்ட புது உலகமும் பிறக்கிறது. அனைத்து நாட்டு மக்களும் (இஸ்லாமிய நாடுகளை தவிர) மதங்களை மறந்து வெகு விமரிசையாகக் கொண்டாடும் ஒரே பண்டிகை, ஆங்கிலப் புத்தாண்டு மட்டுமே.

புதிய வருடத்தை வரவேற்பதற்காகவும், புதிய வாழ்க்கையை தேர்ந்தெடுப்பதற்காகவும், அனைத்து நாட்டு மக்களும் சந்தோஷமாகப் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள்.]
இதில், இந்தியாவும் விதிவிலக்கல்ல. சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியது.

வாண வேடிக்கைகள், பளிச்சிடும் மின்விளக்குகள், ‘ஹேப்பி நியூ இயர்’ முழக்கங்களுடன் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் முழுமையடைகிறது.

நாடு முழுவதிலும் முக்கிய நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டின. பொதுமக்கள் ஆட்டம், பாட்டம், வாணவேடிக்கையுடன் கோலாகலமாக புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர்.

டெல்லி இந்தியா கேட், மும்பை மெரைன் டிரைவ், கொல்கத்தா பூங்கா தெரு, பஞ்சாப் பொற்கோவில், உத்தரப்பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டியது.

இதேபோல், தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் புத்தாண்டை உற்சாகத்துடன் கொண்டாடி வரவேற்றனர். தலைநகர் சென்னையில் மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை உள்பட பல்வேறு பகுதிகளில் புத்தாண்டை குடும்பத்தினரும், உறவினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். கண்ணை கவரும் வகையில் நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.

நடப்பு டாட்காம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

புத்தாண்டை முன்னிட்டு பிள்ளையார் பட்டியில் பக்தர்கள் தரிசனம்..

Recent Posts