2018-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு..

உலகின் மிக உயரிய விருதுதான நோபல் பரிசு பல்வேறு துறைகளில் இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது

2018-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெண் விஞ்ஞானி உட்பட 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது.

லேசர் இயற்பியல் துறையில் முன்மாதிரி கண்டுபிடிப்புகளுக்கு, அமெரிக்காவின் ஆர்தர் அஷ்கின், பிரான்சை சேர்ந்த ஜிரார்டு மவ்ரு,

மற்றும் கனடாவைச் சேர்ந்த டோன்னா ஸ்ட்ரிக்லேண்ட் ஆகியோருக்கு இந்த ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்து வழங்கப்படவுள்ளது.
நீண்ட காலத்துக்கு பிறகு இயற்பியலுக்காக நோபல் பரிசு பெறும் 3-வது பெண் விஞ்ஞானி என்ற பெருமையையும் டோனோ ஸ்ட்ரிக்லேண்ட் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நோய் எதிர்ப்பு மருத்துவ வல்லுநர்களான அமெரிக்காவின் ஜேம்ஸ் பி. அலிசன், ஜப்பானைச் சேர்ந்த தசுக்கு ஹோன்ஜோ ஆகியோர் புற்றுநோயைக் குணப்படுத்தும் மருத்துவ கண்டுபிடிப்பிற்காக, 2018-ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது.

வேதியியலுக்கான நோபல் பரிசு நாளை அறிவிக்கப்பட உள்ளது. அதை தொடர்ந்து அக்டோபர் 5-ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும், 8-ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்படவுள்ளது.

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி விடுதலை..

முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மட்டும் பாரபட்சம் ஏன்?: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

Recent Posts