2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை : சரத் பவார் ..


வருகிற 2019 மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார்.

மத்திய முன்னாள் விவசாயத்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவார், தேர்தலுக்கு முந்தைய ஆலோசனை கூட்டமாக அக்கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்ற இரண்டு நாள் நிகழ்சியில் பங்கேற்றார்.

இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்.எல்.ஏ.வுமான ஜிதேந்தர அஹ்வாத், வருகிற மக்களவைத் தேர்தலில் சரத் பவார் போட்டியிடமாட்டார் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மும்ப்ரா-கல்வா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜிதேந்தர அஹ்வாத் குறிப்பிட்டுள்ளதாவது :-

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட போதே அடுத்த முறை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என சரத் பவார் தெளிவுபடுத்திவிட்டார்.

மெலும், வரும் மக்களவைத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் எனது பெயரை கருத்தில் கொள்ள வேண்டாம், தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை. எனவே, என் பெயரை கட்சியினர் யாரும் முன்மொழிய வேண்டாம் என அவர் கட்சியினரிடம் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தல் சமயத்தில் கட்சியினர் அலோசித்து வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வோம், அதற்கான ஆலோசனைகள் தற்போது நடைபெற்று வருகிறது.