2019-ல் நடைபெறும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் குறித்த திட்ட அட்டவணை வெளியீடு…

2019-ஆம் ஆண்டில் நடைபெறும் தேர்வுகள் குறித்த திட்ட அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, 2018 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட 23 தேர்வுகளின் முதன்மைத் தேர்வுகளும், 2019 ஆண்டு புதிதாக 29 தேர்வுகள் என மொத்தம் 52 தேர்வுகள் நடத்தப்படும்.

அந்தத் தேர்வுகளுக்கான அறிவிக்கை தேதி, தேர்வு நடைபெறும் தேதிகள் அட்டவணையிடப்பட்டுள்ளன.

உதவி அரசு வழக்கறிஞர், உதவி சிறை கண்காணிப்பாளர், தடய அறிவியல் துறையின் தொழில்நுட்ப ஆய்வாளர்,

புள்ளியியல் பேராசிரியர்கள், தொல்லியல்துறை நூலகர், மாவட்டக்கல்வி அலுவலர், உப்பு ஆய்வாளர், லஞ்ச ஒழிப்புத்துறை உதவி கண்காணிப்பாளர் உள்ளிட்ட,

குரூப் 1 முதல் குரூப் 4 வரையிலான 52 விதமான பதவிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

தேர்வு நடத்தப்படும் முறை, பாடத்திட்ட விபரங்கள் குறித்த விவரங்கள், இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும் என்று
டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் அறிவித்துள்ளது.

சக்தி – கவுசல்யா திருமணம்: புகார், விசாரணை, தீர்ப்பு, மறுப்பு என நீளும் சர்ச்சை  

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நியாயமானவர் : வைகோ..

Recent Posts