முக்கிய செய்திகள்

2020ல் ஆயுர்வேத துறையில் 2.6 கோடி வேலைவாய்ப்புகள் : சுரேஷ் பிரபு தகவல்..


2020ஆம் ஆண்டில் ஆயுர்வேத துறையில் வரும் 2 கோடியே 60 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற ஆரோக்கியம் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்ற அவர், ஆயுர்வேதத்துக்கு இந்தியாவில் 500 கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை இருப்பதாகவும், வெளிநாடுகளுக்கு 200 கோடி ரூபாய் வரை ஆயுர்வேத பொருட்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனால், இளம் தொழில்முனைவோர்கள் ஏராளமான ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்கும் வாய்ப்பு உருவாகியிருப்பதாகவும் அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.

ஆயுர்வேத துறையின் வளர்ச்சியால் வரும் 2020ஆம் ஆண்டில் 10 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 2 கோடியே 50 லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும் என கூறிய அவர், அடுத்த சில ஆண்டுகளில் ஆயுர்வேத துறை மும்மடங்கு வளர்ச்சியடையும் என்றும் தெரிவித்தார்.