
2021 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாட்டில் நடைபெற உள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
முன்னதாக இந்த தொடர் இந்தியாவில் நடத்த திட்டமிடப் பட்டிருந்தது. கரோனா தொற்று பரவல் காரணமாக இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த தொடரை நடத்தும் ஹோஸ்ட் அணியாக இந்தியா களம் இறங்குகிறது.