2023ஆம் ஆண்டிற்குள் சூரிய ஒளி மூலம் 9 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் மின் தகடுகளை நிறுவ தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு புதிய கொள்கையை வகுத்து வெளியிட்டுள்ளது.
இதற்கான புத்தகத்தை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
அதன்படி, தற்போது தமிழகத்தில் 2 ஆயிரத்து 200 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய ஒளி மின் தகடுகள் நிறுவப்பட்டுள்ளன.
இதை, அடுத்த நான்கு ஆண்டுகளில் 6 ஆயிரத்து 800 மெகாவாட் அளவில் அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
40 விழுக்காடு மின் தகடுகளை மேற்கூரைகள் மீது பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சூரிய எரிசக்தியை உற்பத்தி செய்யும் நுகர்வோருக்கு 2 ஆண்டுகளுக்கு மின்சார வரிச்சலுகை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.