2023 -ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ்,ஐபிஎஸ் தேர்வு :தமிழக அரசு நடத்தும் இலவச பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..

சென்னையில் தமிழ்நாடு அரசு நடத்தும் அகில இந்திய குடிமை சேவைகள் பயிற்சி மையத்தில் UPSC சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி யில் சேர விரும்புகிறவர்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்பு.
சென்னை,மதுரை,கோவை உள்ளிட்ட நகரங்களில் அகில இந்திய குடிமை சேவைகள் பயிற்சி மையத்தில் UPSC சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் தமிழக அரசால் நடத்தப்படுகிறது.
2023-ஆம்ஆண்டிற்கான அகில இந்திய குடிமை பணி (யுபிஎஸ்சி) முதல்நிலைத் தேர்வுக்கு தயார் ஆகும் இளைஞர்களுக்கு தமிழக அரசு அண்ணா நுாற்றாண்டு குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையங்கள் தமிழகத்தைச் சார்ந்த இளநிலை பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கட்டணமில்லா, தங்குமிடம்,உணவு வழங்கி இப்பயிற்சி மையங்கள் செயல்பட்டுவருகின்றன.
இப் பயிற்சி மையத்தில் சேரவிரும்புகிறவர்கள் Civilservicecoaching.com 07.10.2022 முதல் 27.10.2022 வரை விண்ணப்பிக்கலாம்.

No photo description available.

கோட்டையூர் பேரூராட்சி 4வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் திருமதி.பொன்னழகு மணி பாஜகவில் இணைந்தார்..

வடகிழக்கு பருவமழை அக்., 20-ம் தேதி தொடங்க வாய்ப்பு :வானிலை ஆய்வு மையம் தகவல்..

Recent Posts