இஸ்ரேல்-ஈரான் இடையே போர் தொடங்கியது..

இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி போரை தொடங்கியது ஈரான்.
இஸ்ரேல் மீது ஏவுகணை மழை பொழிந்த ஈரான் ,ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாஹ் உள்ளிட்டோரின் தியாகத்திற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறோம்.
ஈரானில் இருந்து முதற்கட்டமாக 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிஜவிக்கின்றன.

இது குறித்து ஈரான் ராணுவம் விரைவில் அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இஸ்ரேல் எங்களின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தால், எங்களின் அடுத்த தாக்குதல்கள் இன்னும் அழிவுகரமானதாக இருக்கும் ஈரான் ராணுவம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் நாடு முழுவதும் சைரன்கள் ஒலித்து வருகின்றன.இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் ஏவியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது
இதனிடையே ஈரானின் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்க இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

-இஸ்ரேலை பாதுகாக்க ஈரானிய ஏவுகணைகளில் சிலவற்றை அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் வீழ்த்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இஸ்ரேல், ஈராக், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளின் வான்வெளியை மூடி அந்தந்த நாடுகளின் அரசுகள் உத்தரவிட்டுள்ளன. ஏவுகணை தாக்குதலால் இஸ்ரேல் நாட்டின் ரயில் சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

காரைக்குடி CECRI-யில் அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கான பொதுமக்களுக்கு அனுமதி..

ஹிஸ்புல்லாவின் கொரில்லா தாக்குதலில் சிக்கி 14 இஸ்ரேலிய வீரர்கள் உயிரிழப்பு…

Recent Posts