
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், சுர்பீர் சிங் சாந்துவுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார். 45 நிமிடங்கள் வரை நடந்த கூட்டத்தில் எத்தனை கட்டங்களாக, எந்தெந்த தேதிகளில் தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. தேர்தல் ஆணையம் முடிவுசெய்துள்ள தேதிகள் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.