
நீலகிரி மாவட்டத்தில் மசினகுடி வனப்பகுதியில் 21 நாட்களாக தேடப்பட்டு வந்த ஆட்கொல்லி புலி பிடிபட்டது. மசினகுடிக்கும் மாயாறுக்கும் இடைய உள்ள வனப்பகுதியில் பிடிபட்டது.
4 மனிதர்கள், 30-க்கும் மேற்பட்ட கால்நடைகளை தாக்கி கொன்ற T23 புலி சிக்கியது.
புலி பிடிபட்டதைத் தொடர்ந்து மசினக்குடி பொதுமக்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டனர்