
காரைக்குடியில் கோலாகலமாக 21வது சட்ட உரிமைகள் கழக மாநாடு நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கோலாகலமாக 21வது சட்ட உரிமைகள் கழக மாநாடு சுபலெட் சுமி மஹாலில் நடைபெற்றது.
விழாவில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், தமிழ்நாடு சட்ட உரிமைகள் கழக மாநிலத் தலைவருமான .மனித நேயம் டாக்டர் B.SS .. ஜெகன் முன்னிலை வகித்தார்.

சேவைச் செம்மல் மாநிலத் துணைத் தலைவர் M. பழனி தலைமையில் தொடங்கியது
விழாவில் மாவட்ட செயலாளர் ை லயன் சி.கே.மஹால் நாகராஜன் வரவேற்றுப் பேசினார்.
மாநில நிர்வாகச் செயலாளர் RM. ஆனந்தராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர் லயன் C செல்வநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர், S.சரவணன், ‘மண்டல துணைச் செயலர் விஜயன் மாவட்ட விசாரணை அதிகாரி V நாகராஜன் ஆகியோர் ஏற்பாடுகளை முன்னின்று செய்தனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக அழகப்பா பல்கலைக்கழகத்தில் தான் துணைவேந்தரா பதவி வகித்த காலத்தில் தரம் வரிசையில் பல்கலைக்கழத்தை உயர்த்திக் காட்டிய முன்னாள் துணைவேந்தர் டாக்டர் S.சுப்பையா அவர்கள் சிறப்புரையாற்றினார்

என்.சி.சி தமிழ்நாடு 9 வது பட்டாலியன் ரஜ்னி ஸ்பிரதாப்,, நகைச் சுவை பேச்சாளர் பட்டிமன்ற நடுவர் தேவகோட்டை டாக்டர் ராமனாதன், பேராசிரியை கீதா ஆகியோர் சட்ட உரிமை கழகத்தின் மாநிலத் தலைவர் ஜெகன் மற்றும் நிர்வாகிகள் சேவைகளை பாராட்டியும், குறிப்பாக கரோனா காலத்தில் பணியாற்றிய அரசுமருந்துவமனை டாக்டர்கள், செவிலியர்களைப் பாராட்டி சேவை விருதுகளை வழங்கினார்கள்.
அமைப்பின் சார்பில் 8 பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்களையும், 100 பேருக்குச் சேலைகளையும் வழங்கினார்கள்.

விழாவின் இறுதியாகப் பல்கலைக் கழக மாணவிகள் கலை நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் சென்னை,புதுக்கோட்டை ,, ராமநாதபுரம், சிவகெங்கை, தேனி, மாவட்டங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
21வது மண்டல மாநாட்டை சிறப்பாக நடத்திய அனைவருக்கும் மாநிலத் தலைவர் பொன்னடை போர்த்தி பாராட்டி சிறப்பித்தனர்.