வரும் 22ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும். 7-வது ஊதிய குழுவின் 21 மாத ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும்

என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் அமைப்பான ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது.

மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதிகளின் யோசனையை ஏற்று போராட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் வேலைநிறுத்தம் செய்ய மாட்டோம் என்ற உறுதிமொழியை நீதிமன்றத்திலிருந்து திரும்பப் பெற்றது ஜாக்டோ ஜியோ.

திட்டமிட்டபடி ஜனவரி 22ல் வேலைநிறுத்தம் நடைபெறும். எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற அரசுத்தரப்பு அவகாசம் மட்டுமே கோருகிறது என ஜாக்டோ ஜியோ கூறி உள்ளது.

ஜாக்டோ-ஜியோ அரசு தரப்பு வாதத்தை தொடர்ந்து வழக்கை ஜனவரி 28-ந் தேதிக்கு ஒத்திவைத்தது மதுரை ஐகோர்ட் கிளை.

பத்திரிகையாளர் கொலை வழக்கு : குர்மீத் ராம் ரகீம் குற்றவாளி சிபிஐ நீதிமன்றம் அறிவிப்பு..

கொடநாடு கொலையில் புகாருக்கு ஆளான எடப்பாடி பதவியில் நீடிக்கக்கூடாது : மு.க.ஸ்டாலின்..

Recent Posts