2 ஜி வழக்கில் இருந்து, தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி, முன்னாள் அமைச்சர் ராஜா ஆகியோர் விடுபட்டதும், தி.மு.க., சார்பில் தமிழகம் முழுவதும் வெற்றி விழா பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து கிளம்பினர்.
பெங்களூரு உயர் நீதிமன்றத்தில், நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பு மூலம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, அ.தி.மு.க.,வினர் தமிழகம் முழுவதும், வெற்றி விழா பொதுக்கூட்டங்களை நடத்தியது போல் திழுகவினரும் விரும்பினர்.
ஆனால், அவை அனைத்துக்கும், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் தடை போட்டு விட்டார். ‘இப்படித்தான், இடையில் பெறப்பட்ட ஒரு தீர்ப்பை வைத்து கொண்டாடிய ஜெயலலிதா, உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். அதற்காகத்தான், சசிகலா தண்டனையை அனுபவித்து வருகிறார்.
அதனால், கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வைத்து, கொண்டாடத் தேவையில்லை. அமைதியாகவே இருக்கவும். தேவையானால், மக்கள் பிரச்னைகளை வைத்து, தி.மு.க., நடத்தும் பொதுக்கூட்டங்களில் இடைச்சொருகலாக மட்டும், 2 ஜி வெற்றி குறித்து பேசவும்’ என கூறியுள்ளார்.