முக்கிய செய்திகள்

2வது ஒருநாள் போட்டி: ரோகித் ஷர்மா இரட்டை சதம்…


மொகாலியில் இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்தது. முதலில் களமிறங்கிய ரோகித் ஷர்மா இரட்டை சதம் அடித்துள்ளார்.  3வது முறையாக இரட்டை சதம் அடித்து , புதிய சாதனை படைத்துள்ளார். அதிக முறை இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி நல்ல துவக்கம் அளித்தது. அபாரமாக ஆடிய ஷிகர் தவான் அரை சதமடித்தார்.

முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்த போது தவான் (68) அவுட்டானார். பின் இணைந்த ரோகித், ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி இலங்கை அணி பந்துவீச்சை எளிதாக சமாளித்து ரன் சேர்த்தது. அபாரமாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர், தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். தோனி (7) ஏமாற்றினார்.

அபாரமாக ஆடிய ரோகித், மூன்றாவது முறையாக இரட்டை சதமடித்து சாதனை படைத்தார். இந்திய அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 392 ரன்கள் குவித்தது. ரோகித் (208) அவுட்டாகாமல் இருந்தார்.