நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வது மட்டுமே தீர்வு என டெல்லியில் போராடும் விவசாயிகள் மீண்டும் அறிவித்துள்ளனர்.
குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என மத்திய அரசு உறுதியளித்த நிலையில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டத்தை தொடர்வது என விவசாய சங்கங்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
