முக்கிய செய்திகள்

2018-19ல் 3 லட்சம் வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்க இலக்கு : தமிழக அரசு

2018 -19-ஆம் நிதியாண்டில் 3 லட்சம் வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஆளில்லா வானூர்தி மூலம் புகைப்படவியல் ஆய்வுத் திட்டத்துக்கு 701 கோடியே 59 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் 2 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவில்  நவீன நில அளவை மற்றும் படம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி மையம் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. வீடற்ற ஏழை மக்களுக்கு வீட்டுமனை வழங்கும் திட்டத்தின் கீழ் 2018 -19-ஆம் நிதியாண்டில் 3 லட்சம் வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​3 Lakhs patta plots for Poors: TN