சென்னையில், ஓலா, உபேர் போன்ற கால்டாக்சி நிறுவனங்களில் பணியாற்றும் 30 ஆயிரம் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஓலா, உபேர் கால் டாக்சிகளுக்கான பயணக் கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்து கின்றனர்.
தமிழ்நாடு கால்டாக்சி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தேர்தல் விதிமுறைகளை காரணம் காட்டி ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது.
இதை அடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு வேலைநிறுத்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.