2022-ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியீடு..

தமிழ்நாடு தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி 2022 -ஆம் ஆண்டிற்கான தேர்வு பட்டிலை தேர்வாணையத் தலைவர் பாலசந்திரன் வெளியட்டார். அதன் படி குரூப் 2 தேர்வுகள் 2022 பிப்ரவரியிலும்,குரூப் 4 தேர்வுகள் மார்ச் மாதத்திலும் நடைபெறும் எனத் தெரிவித்தார்.

தமிழகத்தில் வரும் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குரூப் 2 தேர்வும் மார்ச் மாதம் குரூப் 4 தேர்வும் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

மேலும் 2022ம் ஆண்டில் மேற்கொள்ள உள்ள பணி நியமனங்கள் போட்டித் தேர்வுகள் மற்றும் தேர்வு விதிமுறைகள் குறித்த திட்ட அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன், ‘பிப்ரவரி மாதம் குரூப் 2 தேர்வுகள் நடைபெறும் எனவும் மார்ச் மாதம் குரூப் 4 தேர்வுகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியான 75 நாட்கள் கழித்து தேர்வுகள் நடைபெறும்.

அடுத்த ஆண்டு மொத்தம் 32 வகையான தேர்வுகள் நடைபெறும்.தேர்வு அறிவிப்புக்கு முன்பாக பாடத்திட்டம் தொடர்பாக விரிவாக வெளியிடப்படும்.டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் மாணவர்கள் ஓஎம்ஆர் விடைத்தாள்களில் கருப்பு மை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஓஎம்ஆர் விடைத் தாள்களை எடுத்து வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் கருவிகள் மூலம் கண்காணிப்பு வளையத்திற்கு கொண்டு வரப்படும். .

குரூப் 2 பிரிவில் 5831 காலிப்பணியிடங்களும், குரூப் 4 பிரிவில் 5255 காலிப்பணியிடங்களும் நிரப்பட உள்ளது,’ என்றார்

தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்..

தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 சரிந்து ரூ.36,000க்கு விற்பனை..

Recent Posts