முக்கிய செய்திகள்

35 கோடி ஆண்டு வரலாறு கொண்டு கடலுக்குள் கம்பீரமாக நிற்கும் அடுக்குப்பாறை..

அயர்லாந்து நாட்டின் கடற்கரையிலிருந்து 80 மீட்டர் தூரம் கடலுக்குள் நிற்கிறது ஒரு வித்தியாமான அடுக்குப் பாறை துண்டு. அதன் உச்சியில் பசும்புல் இன்றும் முளைத்து படர்ந்திருக்கிறது.

அதன்பெயர் துன் பிரிஸ்டே அல்லது உடைந்த கோட்டை என்கிறார்கள். அது வியப்பூட்டும் அடுக்குப்பாறையாக காலத்தைக் கடந்தும் நிற்கிறது. பூமியின் வரலாற்றில் 35 கோடி ஆண்டுகளைக் கடந்து அது நிற்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ஒரு அடுக்கு, அதன்மீது இன்னொரு அடுக்கு என்று பல வண்ண அடுக்குகளோடு அது கடல் அலைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கிறது.

லோயர் கார்போனிஃபெரஸ் அல்லது நிலக்கரியாக பூமியின் வனங்கள் புதைவதற்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தது இது என்று புவியியலாளர் மதிப்பிட்டுள்ளனர்.

இந்தக் காலகட்டத்தில் இன்றைய அயர்லாந்து நாடு உயரமான பகுதியாக இருந்தது என்கிறார்கள். இந்த துன் பிரிஸ்டே எனப்படும் அடுக்குப்பாறை முதலில் அயர்லாந்து கடற்கரையோடு நிலப்பகுதியுடன் ஒட்டியே இருந்தது. 1393 ஆம் ஆண்டு வாக்கில்தான் இந்த அடுக்குப்பாறையை நிலப்பகுதியிலிருந்து கடல் பிரித்தது.

இதன் உச்சியில் வசித்த மக்கள் கப்பலில் இருந்து கயிறுகள் மூலம் மீட்கப்பட்டனர். ஆனால், உள்ளூர் நாட்டுப்புற கதைகளோ வேறுவிதமாக சொல்கிறது.

அதாவது, ஒரு மலைமீது வசித்த மக்களுடைய தலைவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாற மறுத்ததாகவும், உடனே, செயின்ட் பேட்ரிக் கோபமடைந்து, அந்த தலைவர் இருந்த பகுதியை மற்றும் பிரித்து கடலுக்குள் கொண்டுபோய் நிறுத்திவிட்டதாக அந்த கதைகள் சொல்கின்றன.

முதலில் சொல்லப்படுவதே நம்பக்கூடிய விஷயமாக இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ஹெலிகாப்டரில் சென்ற சில அறிவியலாளர்கள் அந்த அடுக்குப்பாறை மீது இறக்கிவிடப்பட்டனர். காலங்கள் கடந்து அந்தப் பாறை மீது கால் பதித்தவர்கள் அவர்கள்தான். அவர்கள் அங்கு ஒரு இரவு தங்கி ஆய்வு நடத்தினர். அந்த பாறை மீது ஆய்வு நடத்தினார்கள்.

மத்தியக்காலத்தை சேர்ந்த ஒரு வீட்டின் மிச்சத்தையும், விவசாயம் செய்ததற்கான படிமங்களையும், சோளம் அறைக்கும் கல்லையும் அவர்கள் கண்டனர்.
நன்றி
ஆதனுர் சோழன் முகநுால் பதிவு