முக்கிய செய்திகள்

3-வது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம்..


தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், போக்குவரத்து ஊழியர்களின் பல தொழிற்சங்கங்கள் 3வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநிலத்தின் பெரும்பான்மையான இடங்களில் பேருந்துகள் பெரும் அளவு இயங்காததால், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் 3 வது நாளாக இன்றும் தொடர்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் 35 சதவிகித பேருந்துகள் ஓடுவதாக மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அனைத்து பேருந்து பணிமனைகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.