பொதுத்துறை வங்கிகள் நான்கை தனியார் மயமாக்க மத்திய நிதியமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக வந்த செய்தியை மத்திய நிதியமைச்சகம் மறுத்துள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட நான்கு வங்கிகளைத் தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுத்துறை நிறுவனங்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள் கடந்த 1ம் தேதி அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டிலும் எடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வங்கித் துறையில் தனியார்மயத்தை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் நிதி ஆண்டில் முதல்கட்டமாக நான்கு வங்கிகள் தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
இந்த நடவடிக்கைக்காக சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் மகராஷ்டிரா, பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய நான்கு வங்கிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் இரண்டு வங்கிகளைத் தனியார்மயமாக்கும் அறிவிப்பு வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
பெரும்பான்மையான பங்குகளை அரசு வைத்துக் கொண்டு, குறைவான பங்குகள் தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வரும் நிதி ஆண்டில் இதற்கான பணிகளைத் தொடங்கத் திட்டமிட்டிருந்தது. ஆனால், வங்கி ஊழியர்களின் சங்கங்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பலாம் என்று அதிகாரிகள் ஆலோசனை கூறியுள்ளனர்.
வங்கிகள் தனியார்மயமாக்கப்படுவதாக வந்த இத்தகவலை நிதி அமைச்சகம் மறுத்துள்ளது.