ஐந்தாவது முறையாக நாட்டு மக்களிடையே கோரோனா தொற்று குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி தற்போது பொதுமக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
‘ஆத்ம நிர்பர் பாரத் அபியான்’ திட்டத்தின் கீழ் 20 லட்சம் கோடி சிறப்பு திட்டங்கள்.பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
அவர் உரையின் முக்கிய அம்சங்கள்
கொரோனா விவகாரத்தில் உலகிற்கே இந்தியா ஒரு நம்பிக்கை ஒளியை அளித்துள்ளது: நாடு இதுவரை எதிர்கொள்ளாத மாபெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது
தினமும் இந்தியாவில் இரண்டு லட்சம் PPE மற்றும் முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டுவருகின்றன
உலகிற்கே இந்தியா நம்பிக்கை ஒளியை கொடுத்து வருகிறது: .
உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு 3 லட்சம் பேர் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது
காசநோய், போலியாவை எவ்வாறு இந்தியா வெற்றியாக கையாண்டு உலகுக்கு வழிகாட்டியதோ அவ்வாறே கொரானைவையும் வெல்வோம்.
யாரையும் சாராமல் தன்னம்பிக்கையுடன் இருப்போம் என 130 கோடி இந்தியர்களும் உறுதி ஏற்க வேண்டும்:
நாம் கொரோனா சங்கிலிதொடரை தடுத்தோம்.இனியும் தடுப்போம்.
கொரோனா வைரஸ் உலக நாடுகளை மண்டியிட வைத்துள்ளது.
கொரோனா பாதிப்பால் இந்தியாவில் அன்பிற்குரியவர்கள் சிலரை பறிகொடுத்துள்ளோம்.
40 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியாவின் கார்பன் உமிழ்வு குறைந்துள்ளது.
உலக அளவில் இந்தியாவின் செல்வாக்கு உயர்ந்து வருகிறது
இந்திய மருந்துகள் உலகத்திற்கே நம்பிக்கை அளிக்கின்றன
‘ஆத்ம நிர்பர் பாரத் அபியான்’ திட்டத்தின் கீழ் 20 லட்சம் கோடி இந்தியாவின் GDP- வளர்ச்சிக்கு வழங்கப்படும்.
இந்தியாவின் ஐந்து முக்கியத் தூண்கள்
*பொருளாதாரம்
*இந்தியாவின் கட்டமைப்பு
*தொழில்நுட்பம் குறித்த தொலைநோக்கு பார்வை
*இந்தியாவின் மக்கள் சக்தி
*உற்பத்தி தேவை
பொருளாதாரம்,உட்கட்டமைப்பு,இந்தியாவின் அமைப்புமுறை,ஜனநாயகம்,தேவையை பூர்த்தி செய்யும் திறன் ஆகியவை இந்தியாவின் ஐந்து தூண்கள்..
இந்த 20 லட்சம் கோடி கொரோனாவால் ஏற்ப்பட்டுள்ள பொருளாதார சிக்கலிலிருந்து நிச்சயம் மீண்டுவர உதவும்.
இத்திட்டம் குறித்த விரிவான விவரங்களை நிதியமைச்சர் அறிவிப்பார்
20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார திட்டங்களை அறிவிக்கிறார் பிரதமர் மோடி
* இத்திட்டம் குறித்த விரிவான விவரங்களை நிதியமைச்சர் அறிவிப்பார் – பிரதமர்
* சிறு,குறு நிறுவனங்களுக்கு இந்த திட்டம் உதவும்
விவசாயம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளை பொருளாதார வளர்ச்சி தேவைகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் உதவிகள் செய்யப்பட இருக்கிறது
இந்த இக்கட்டான சூழ்நிலையை வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
கைத்தறியையும் நாம் இந்த சமயத்தில் பிரபலபடுத்தவேண்டும்.
ஏற்றுமதியை வேகப்படுத்தவேண்டிய நேரமிது.
4-ஆம் கட்ட ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். அது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்