முக்கிய செய்திகள்

ஒரே நாளில் 4 ரயில் விபத்துகள்: 7 பேர் பலி!

ஒரே நாளில் 4 ரயில் விபத்துகள் நேரிட்டு அதில் 7 பேர் உயிரிழந்தனர் என்று ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் மூன்று விபத்துகள் உத்தரப்பிரதேசத்திலும் ஒரு ரயில் விபத்து ஒடிசாவிலும் ஏற்பட்டுள்ளது. நேற்று அதிகாலை உத்தரப்பிரதேசத்தில் சித்தரக்கூட் அருகே வாஸ்கோடகாமா ரயிலின் 13 பெட்டிகள் தடம் புரண்டதில் 3 பேர் உயிரிழந்தனர்.

மற்றொரு இடத்தில் ஆளில்லா லெவல் கிராசிங்கில் ஜம்மு-பாட்னா அர்ச்சனா எக்ல்பிரஸ் ரயிலின் எஞ்சின் தனியாக கழன்று தடம் புரண்டது. இதே போல் அமேதியில் மின்சார ரயில் வேகமாக வந்த காரில் மோதியது. இதில் திருமண கோஷ்டியை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

இதனிடையே, ஒடிசா மாநிலம் கட்டாக் சரக்கு ரயில் ஒன்றின் 14 பெட்டிகள் குர்தா ரோடு ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் இன்று ரயில்சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

4 train accidents in oneday