முக்கிய செய்திகள்

41வது சென்னை புத்தக் கண்காட்சி: அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்


41வது புத்தகக் கண்காட்சி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் புத்தகப் பிரியர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில், சென்னையில் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. தற்போது 41வது புத்தகக் கண்காட்சி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை அமைந்தகரையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் பிரம்மாண்டமாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

தொடக்க விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு, புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தார். இன்று தொடங்கி, வரும் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

700க்கும் மேற்பட்ட அரங்குகளில், ஒரு கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.
புத்தகக் காட்சியில் பங்கேற்பதற்காக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 5 லட்சம் மாணவர்களுக்கு இலவச டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.