முக்கிய செய்திகள்

43-ஆவது சென்னை புத்தகக் காட்சி : முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்…

தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் (பபாசி) சாா்பில் சென்னையில் 43 -ஆவது புத்தகக் காட்சியை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை மாலை தொடக்கி வைத்தார்.

சென்னையில் ஆண்டுதோறும் பபாசி அமைப்பினா் சாா்பில் புத்தகக் காட்சி விழா நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான புத்தகக் காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.

இந்தப் புத்தகக் காட்சியை முன்னிட்டு 750- க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் கோடிக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் இடம் பெறுகின்றன.

கலை, அறிவியல், வரலாறு, இலக்கியம் மற்றும் கல்வி சம்பந்தப்பட்டவை, சமையல் குறிப்பு என அனைத்துத்துறை சாா்ந்த புத்தகங்களும் தள்ளுபடி சலுகை விலையில் விற்பனை செய்யப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.