
இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் வைகை ஆற்றின் குறுக்கே 1975ம் ஆண்டு கட்டப்பட்ட மதகு அணையில் இருந்து ஆர்.எஸ். மங்கலம் வரையில் 45 கி.மீ தூரத்திற்கு தூர்வாரப்பட்டுள்ளதால் வைகை நீர் தங்குதடையின்றி செல்கிறது.48 ஆண்டுகளுக்குப் பிறகு கால்வாயில் ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய்க்கு செல்லும் வைகை தண்ணீர் .

புதர் மண்டிக்கிடந்த இந்த கால்வாய், தமிழ்நாடு பாசன வேளாண் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ், உலக வங்கி நிதியுதவியுடன் ₹52.50 கோடி செலவில் சீரமைக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசுக்கு இராமநாதபுரம் விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
