4 மாவட்டங்களைத் தவிர்த்து மாநிலம் முழுவதும் 50 சதவித பேருந்துகள் இயக்க தமிழக அரசு அனுமதி

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை இயக்க அனுமதி அளித்துள்ளது.

4-வது கட்ட பொதுமுடக்கம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் நேற்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் மட்டும் நாடு தழுவிய பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்தது.
மேலும் 8-ந்தேதியில் இருந்து வழிபாட்டு தலங்கள், ஓட்டல்கள், மால்களை திறக்க அனுமதி அளித்தது.

இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட சிவப்பு மண்டலமான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை தவிர்த்து தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் 50 சதவித பேருந்துகள் இயங்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
மொத்த இருக்கைகளில் 60 விழுக்காடு இருக்கையில் மட்டுமே பயணிகள் அமர வேண்டும். போக்குவரத்தை 8 மண்டலங்களாக பரிக்கப்பட்டுள்ளது.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
8 மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை.எனத் தெரிவித்துள்ளது.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் வழங்க வங்கிகளுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்..

சர்வதேச விண்வெளிமையத்திற்கு ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வீரர்களை ஏற்றிக்கொண்டு விண்ணில் பாய்ந்தது

Recent Posts