மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களைப் பெறுவதற்கு, ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தனி ஆதார் அட்டையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
பால் ஆதார் என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின்படி 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நீல நிறத்தில் ஆதார் அட்டை வழங்கப்பட உள்ளது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைப் பொருத்தவரை அவர்களின் கை விரல் ரேகை, கருவிழிப் படலம் ஆகியவை பதிவு செய்யப்படாது.
குழந்தைகளின் பிறப்புச் சான்று, பெற்றோரின் ஆதார் எண் ஆகியவை டேப்லெட் கணினியில் பதிவு செய்து, அதன்மூலம் குழந்தைகளின் படம் எடுக்கப்பட்டு, பின்னர் ஆதார் அட்டை வழங்கப்படும். குழந்தைக்கு 5 வயது ஆன பிறகு பயோமெட்ரிக் தகவல்களை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.