முக்கிய செய்திகள்

”வேட்பாளருக்கு ஓட்டுபோடுங்க…” : தபாலில் வந்த 500 ரூபாய் நோட்டுகள்…

பெரம்பூர் பகுதியில் வாக்காளர்களுக்கு தபாலில் 500 ரூபாய் நோட்டு டன் கடிதம் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலோடு பெரம்பூர் உள்பட 18 சட்டசபை இடைத்தேர்தலும்,

இதைத் தொடர்ந்து மே 19-ந் தேதி அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம்-பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஓட்டுக்கு பணம் வாங்கும் சில வாக்காளர்களை குறி வைத்து புதுப்புது விதத்தில் அரசியல் கட்சியினர் பணம் கொடுத்து வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் பெரம்பூர் பகுதியில் வாக்காளர்களுக்கு தபாலில் 500 ரூபாய் நோட்டு டன் கடிதம் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பூர் பகுதியில் உள்ள பிரபல தனியார் ஆலை பல ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. அந்த தொழிற் சாலையின் தொழிற்சங்கம் பெயரில் இந்த தபால் வந்து உள்ளது. அந்த தபாலில் கடிதத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டும் இருந்தது.