புதிய அரசு பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி…

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 555 புதிய பேருந்துகளின் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னைக்கு 56 பேருந்துகள், விழுப்புரத்திற்கு 82 பேருந்துகள் மற்றும்

சேலத்திற்கு 112 பேருந்துகள், கும்பகோணம் 102, கோவை 140, மதுரை 63 பேருந்துகள் என மொத்தம் 555 பேருந்துகளின் சேவை தொடங்கப்பட்டது.