
அமைச்சர்கள், 5பேர் ஒரு எம்.எல்.ஏ. மீது 9 புகார்கள் அடங்கிய ஆதாரத்துடன் கூடிய ஊழல் பட்டியலை ஆளுநரிடம் தந்துள்ளோம் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஆளுநரிடம் ஊழல் புகார் பட்டியலை அளித்த பிறகு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு தனக்கு இருக்கும் அதிகாரத்தின்படி நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி அளித்துள்ளார்.
அதிமுக அமைச்சர்கள் மீது திமுக அளித்த புகார் பட்டியலை படித்து வருவதாகவும் ஆளுநர் தகவல் தெரிவித்துள்ளதாக துரைமுருகன் குறிப்பிட்டார்.