முக்கிய செய்திகள்

6 குடியரசுத்தலைவர்களை உருவாக்கிய பெருமை சென்னை பல்கலைக் கழகத்திற்கு உண்டு : ராம்நாத் கோவிந்த்


இந்திய பல்கலைக் கழகங்களுக்கு முன்னுதாரணமாக சென்னை பல்கலைக்கழகம் விளங்குகிறது என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர் இதனை கூறியுள்ளார். உலகின் பழமையான மொழி தமிழ், அது தமிழகத்திற்கு பெருமை என்றும் அவர் தெரிவித்தார். இதனிடையே நாட்டில் வரலாற்று சிறப்புமிக்க பல்கலைக்கழகங்களில் ஒன்று சென்னை பல்கலைக்கழகம் என்று கூறிய அவர், நாட்டில் 6 குடியரசுத்தலைவர்களை உருவாக்கிய பெருமை சென்னை பல்கலைக் கழகத்திற்கு உண்டு என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் இருவர் இங்கு கல்வி பயின்றவர்கள் என்றும் குறிப்பிட்டார்.