முக்கிய செய்திகள்

நன்நடத்தை காரணமாக 67 ஆயுள் கைதிகள் விடுதலை: தமிழக அரசு..


10 ஆண்டுகள் தண்டனை நிறைவு பெற்ற, 67 ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 25.02.18 அன்று 10 ஆண்டுகள் தண்டனை நிறைவு பெற்றவர்களில் முதல்கட்டமாக 67 பேர் விடுதலை செய்யப்படுகின்றனர். கவர்னருக்கு உள்ள அதிகாரத்தின்படி, சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் வழிகாட்டுதலின்படி இவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர்.