முக்கிய செய்திகள்

குட்கா வழக்கில் 6ஆவது நபராக உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் கைது

தடை செய்யப்பட்ட குட்கா பொருளை விற்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்த வழக்கில் உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர் சிவக்குமாரை சிபிஐ அதிகாரிகள் செவ்வாயன்று கைது செய்தனர்.

குட்கா ஊழல் வழக்கில் கிடங்கு உரிமையாளர் மாதவராவ் உட்பட 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது 6-வது நபராக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிவக்குமாரை அக்டோபர் 4 ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

6th person arrested in Gutka case