முக்கிய செய்திகள்

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல் : டெல்லியில் சோனியா ,ராகுல் வாக்களிப்பு..

டெல்லி நிர்மான் பவனில் உள்ள வாக்குச்சாவடியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி தனது வாக்கினை பதிவு செய்தார்.

அதேபோல் டெல்லியில் உள்ள அவ்ரங்கசீப் லேன் பகுதி வாக்குச் சாவடியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது வாக்கினை பதிவு செய்தார்.

7 மாநிலங்களில் உள்ள 59 மக்களவை தொகுதிகளுக்கு 6ம் கட்டமாக மக்களவை தேர்தல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.