முக்கிய செய்திகள்

71-வது குடியரசு தினவிழா : நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்..

இந்திய திருநாட்டின் 71-வது குடியரசு தினத்தை மக்கள் அனைவரும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசு தலைவர் ராம் நாத் நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

தேசிய போர் நினைவுச் சின்னத்துக்குச் சென்ற பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

உடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தலைமை பாதுகாப்பு அதிகாரி பிபின் ராவத் ஆகியோர் உடன் சென்றனர்.

நாட்டின் 71-வது குடியரசு தின விழா நாடுமுழுவதும் மக்களால் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

டெல்லியில் இன்று நடக்கும் குடியரசு தின நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சனாரோ வந்திருந்தார்.

குடியுரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சனாரோ ஆகியோர் காரில் ராஜபாதைக்கு வந்து சேர்ந்தவுடன் அவர்களை பிரதமர் மோடி, முப்படைகளின் தளபதி, தலைமைப் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் அவர்களை வரவேற்றனர்.

அதன்பின் ராஜபாதையில் குடியுரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசியக் கொடி ஏற்று வைத்து மரியாதை செலுத்தினார்.

21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டு, தேசியகீதம் இசைக்கப்பட்டது. அதன்பின் ராஜபாதையில் முப்படைகளின் அணிவகுப்பு தொடங்கியது.

முன்னதாக பிரதமர் மோடி டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்துக்குச் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

வழக்கமாக இந்தியா கேட் பகுதியில் உள்ள அமர் ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்தும் பிரதமர் மோடி முதல் முறையாகப் போர் நினைவுச்சின்னத்துக்குச் சென்றார்.

ராஜபாதையில் முப்படைகளின் அணிவகுப்பு தொடங்கியது. அதனைப் பார்வையிட்ட குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் படைகளின் அணிவகுப்பை ஏற்றார்.

இதனிடையே ராஜபாதையில் ராணுவத்தின் எம்ஐ-17 வி-5 ஹெலிகாப்டர்கள் பறந்து அனைவரின் மீது மலர்கள் தூவின மகிழ்ச்சிப்படுத்தின.

அணிவகுப்பில் எதிரி செயற்கைக் கோள்களை தாக்கி அழிக்கும் சக்தி ஏவுகணை, ராணுவ போர் டாங்கிகல் பீஷ்மா, சின்னூக் ஹெலிகாப்டர்கள் ஆகியவை இடம் பெற்றிருந்தன.

துணை ராணுவப்படையின் மகளிர் பிரிவு, பாரசூட் ரெஜிமன்ட் ஆகியவற்றின் அணிவகுப்பு நடந்தன.

குடியரசு தின அணிவகுப்பில் முதல்முறையாக தனுஷ் கன் சிஸ்டம் பங்கேற்றது.இதில் கேப்டன் மிர்காங்க் பரத்வாஜ் இதற்குத் தலைமை ஏற்று வந்திருந்தார்.

இந்த தனுஷ் ஆயுதம் அதிகபட்சமாக 36.5 கீமி. தொலைவில் உள்ளதைத் தாக்கும் தன்மை பெற்றதாகும்.
விமானப்படையின் அலங்கார ஊர்தியில் ரஃபேல் போர் விமானம், தேஜாஸ் போர்விமானம், ‘அஸ்த்ரா’ ஏவுகணை உள்ளிட்டவற்றின் மாதிரிகள் இடம்பெற உள்ளன.

எதிரி நாட்டுச் செயற்கைக்கோள்களை அழிக்கவல்ல ‘ஏசாட்’ ஏவுகணையைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் காட்சிப்படுத்தப்பட்டது.