முக்கிய செய்திகள்

74-வது சுதந்திரதினம் : செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றி பிரதமர் மோடி உரை..

74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது அவர் “நாட்டின் இறையான்மைக்கு எதிரான பயங்கரவாதமாக இருந்தாலும் சரி, விரிவாக்கமாக இருந்தாலும் சரி, இந்தியா இரண்டையும் எதிர்த்துப் போராடுகிறது, இந்தியாவின் சக்தி குறித்த உலக நம்பிக்கை வலுவடைந்து வருகிறது.” என பிரதமர் கூறியுள்ளார்.
தேசம் சுதந்திரமடைந்து 74வது ஆண்டினை இன்று கொண்டாடி வருகின்றது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையை செங்கோட்டையில் இன்று நிகழ்த்தினார். அதில், “எல்லை கட்டுப்பாட்டு பகுதி, உண்மையான எல்லைக்கோடு வரை நாட்டின் இறையாண்மையை சவால் செய்தவர்களுக்கு இந்தியாவின் ராணுவ வீரர்கள், பொருத்தமான பதிலை அளித்திருந்தனர்.” என குறிப்பிட்டுள்ளார்.
“எல்லை கட்டுப்பாட்டு பகுதி(LoC), உண்மையான எல்லைக்கோடு வரை(LAC), நாட்டின் இறையான்மைக்கு சவால் விடுபவர்களை நம்முடைய வீரர்கள் அவர்கள் புரிந்துகொள்ளும் மொழியில் பொருத்தமான பதிலை அளித்துள்ளனர்” என்று பிரதமர் பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் மறைமுக எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் ஜூன் மாதம் சீனாவுடனான மோதலைப் பற்றி குறிப்பிடுகையில், நாட்டிற்காக 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், நமது வீரர்கள் என்ன செய்ய முடியும் என்றும், நாடு என்ன செய்ய முடியும் என்றும், உலகம் லடாக்கில் கண்டது. இன்று, அந்த துணிச்சலான வீரர்கள் அனைவருக்கும் செங்கோட்டையிலிருந்து வணக்கம் செலுத்துவதாகவும் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்கள் ஒவ்வொவருக்கும் சுகாதார அடையாள அட்டை வழங்கப்படும் என்று தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கத்தை 74-வது சுதந்திரதினமான இன்று பிரதமர் மோடி அறிமுகம் செய்தார்
நாட்டு மக்கள் ஒவ்வொவருக்கும் சுகாதார அடையாள அட்டை வழங்கப்படும் என்று தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கத்தை 74-வது சுதந்திரதினமான இன்று பிரதமர் மோடி அறிமுகம் செய்தார்
நோயாளிகள் ஒருமுறை மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்களிடம் தங்களின் விவரங்களை சிகிச்சையின்போது கொடுத்தால் போதுமானது. அந்தவிவரங்கள் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்படும். அனைத்து விவரங்களும் பாதுகாக்கப்படும். ஒவ்வொரு முறை மருத்துவரைச் சந்திக்கும் போது நோயாளியின் சம்மதத்துடன் அந்த விவரத்தை பார்க்கும் வகையில் இருக்கும்.

மேலும், நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்லாமல், தொலைவில் இருந்தவாறே டெலிமெடிசின் மூலமும், இ-பார்மஸி மூலமும் தங்கள் சிகிச்சைக்கான ஆலோனைகளைப் பெறலாம்.

கரோனா வைரஸ் பரவல் காலத்தில் முன்களத்தில் நின்று பணியாற்றும் மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள் சுகாதாரப்பணியாளர்கள் போன்ற கரோனா போர்வீரர்களுக்கு தலைவணங்குகிறேன். ஒட்டுமொத்த தேசத்தின் சார்பில் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அனைத்து மருத்துவ, சுகாதாரப்பணியாளர்களும் ஓய்வின்றி உழைத்து வருகின்றனர்.

எல்லோருடைய மனதிலும் இப்போது இருக்கும் சந்தேகம் கரோனா தடுப்பு மருந்து குறித்ததுதான். நம்முடைய விஞ்ஞானிகள் 3 தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடித்து அது பல்வேறு கட்டப் பரிசோதனையில் இருக்கின்றன. கரோனா தடுப்பு மருந்து தயாராகிவிட்டால் விரைவாக பெரிய அளவு உற்பத்தி செய்யப்பட்டு அனைத்து இந்தியர்களுக்கும் குறைந்த நாட்களி்ல் வழங்கப்படும்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.