
இந்திய திருநாடு சுதந்திரம் பெற்று 75-ஆண்டுகள் நிறைவு பெற்று 76- ஆண்டைக் கொண்டாடும் வகையில் நாடுமுழுவதும் மக்கள் தேசியக் கொடியை இல்லங்கள் தோறும் ஏற்றி கொண்டாடி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள அண்ணன் பெருமாள் கோவிலில் அமைந்துள்ள அண்ணன் பெருமாள் மெட்ரிக் பள்ளியில் 76-வத சுதந்திரதினத்தை வெகு விமர்சையாக கொண்டாடியது.

சுதந்திர தினவிழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட கவுன்சிலரும், முன்னாள் திமுக ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளருமான திரு. வேணு ராஜசெல்வம் Msc.,MBA., PaDMM.,கலந்து கொண்டு தேசிய் கொடியை ஏற்றி வைத்த சிறப்புரையாற்றினார். விழாவில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கும் ஆசியரிர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.

விழாவில் பள்ளியின் தாளாளர் மதுரை கவி சீனிவாசன், பள்ளி தலைமை ஆசிரியர். ஆசிரியர்கள்,மாணவ,மாணவியர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
