முக்கிய செய்திகள்

8 வழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு..


சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமை வழிச்சாலை அமைக்க 5 மாவட்டங்கிளல் நிலம் கையகப்படுத்த அளவிடும் பணி நடைபெறுகிறது.

இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தருமபுரியைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலம் கையகப்படுத்த தடைவிதிக்க வலியுறுத்தி மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நிலம் கையகப்படுத்த தடைவிதிக்க மறுத்ததுடன். இந்த வழக்கை 8 வழிச்சாலைக்கு எதிராக விசாரணை நடத்தும் 2 நீதிபதிகள் கொண்ட விசாரணை ஆணையத்திற்கு மாற்றினார்.