சுயசார்பு பாரதம் தன்னிறைவு திட்டத்தின் 2-ஆம் கட்ட அறிவிப்புகள்..
டெல்லியில் ரூ.20 லட்சம் கோடி பொருளாதார ஊக்குவிப்பு திட்டமான சுயசார்பு பாரதம் தன்னிறைவு திட்டம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்து வருகிறார்.
நேற்று முன்தினம் நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி மே 18-ஆம் தேதிக்கு முன்பு பொது முடக்கம் நீட்டிப்பு தொடர்பாக அறிவிக்கப்படும் என்றும், நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில் ரூ.20 லட்சம் கோடிக்குத் திட்டங்கள அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்தார்.
அதன்படி புதிதாக வகுக்கப்பட்டுள்ள திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். அதன்படி பொருளாதாரம், மனிதவளம், கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் தேவை ஆகிய இந்த ஐந்து அம்சங்களின்படியே திட்டங்கள் வகுக்கப்பட உள்ளன என்று கூறிய அவர், ரூ.3.60 லட்சம் கோடிக்கு திட்டங்களை அறிவித்தார்.
இந்நிலையில் மற்ற பிற திட்டங்கள் குறித்த அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது அறிவித்து வருகிறார்.
* சிறு விவசாயிகள் பெற்றுள்ள கடனுக்கான வட்டி மே 31 வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது வட்டி தள்ளுபடி சலுகையால் 3 கோடி விவசாயிகள் பயன் அடைவார்கள்.
* புதிதாக 25 லட்சம் விவசாயிகளுக்கு சிசான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது; சிசான் கடன் அட்டைகள் மூலம் ரூ.25 ஆயிரம் கோடி கடன் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
* விவசாயிகள், கிராமப் பொருளாதாரத்துக்கு தேவையான பணப்புழக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
* ஊரக கிராமபுற வங்கிகளுக்கு நபார்டு மூலம் ரூ.29,500 கோடி கடனுதவி
* கடந்த 2 மாதங்களில் விவசாயத்துக்கு ரூ.86,600 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
1 மார்ச் முதல் 30 ஏப்ரல் வரை 63 லட்சம் கடனுதவி விவசாய துறை சார்ந்தோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
புலம் பெயர் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊரடங்கால் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அடைந்த பாதிப்புகள் என்ன?
தொழில் நிறுவனங்கள், வல்லுநர்களுடன் இணைந்து IIT – Madras ஆய்வு மேற்கொள்கிறது.
1 மாத காலத்துக்குள் ஆய்வை முடித்து, MSME Sector-ஐ மீட்பதற்கான யோசனைகளை அரசுக்கு வழங்குகிறது.
அனைத்து வெளிமாநில தொழிலாளர்களுக்கும் 2 மாதம் இலவச உணவு தானியம் வழங்கப்படும்
வெளிமாநில தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் அடுத்த 2 மாதம் தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும்.
ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் இலவச அரிசி வழங்கப்படும்.
‘ஒரே நாடு ஒரே ரேசன்’ திட்டம் ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் நடைமுறைக்கு வரும்.
அரசு – தனியார் பங்களிப்பில் வீடுகள் கட்டப்பட்டு வெளிமாநில தொழிலாளர்களுக்கு குறைந்த வாடகையில் வழங்கப்படும்
குறைந்த வாடகையில் வீடுகள் கட்டி வழங்கும் நிறுவனங்கள், அமைப்புகளுக்கு மத்திய அரசு சார்பில் மானியம் வழங்கப்படும்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அரசின் 3 திட்டங்கள் :- 1. இலவச 5+1 கிலோ ரேசன் பொருட்கள் இரண்டு மாதங்களுக்கு நீட்டிப்பு. 2.எந்த மாநில ரேசன் அட்டைகள் யென்றாலும் ரேசன் பொருட்கள். 3.புலம்பெயர் தொழிலாளர்களுக்கு குறைந்த வாடகையில் வீடுகள் வழங்க ஏற்பாடு.
நடைபாதை கடை நடத்துபவர்களுக்கு உதவ 5000 கோடி ரூபாய் கடன் உதவி.
இதன் மூலம் 50 லட்சம் தெருவோர வியாபாரிகள் பலன் அடைவார்கள்.
ஒரு மாதத்துக்கள் 50 லட்சம் தெருவோர வியாபாரிகளுக்கு
5,000 கோடி ரூபாய்க்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கால் முதலின்றி முடங்கியுள்ள இவர்களுக்கு முதலாக ₹10,000 வழங்கப்படும்.
‘பிரதம மந்திரி கிசான்’ திட்டம் மீனவர்களுக்கும் கால்நடை பாராமரிப்பவர்களுக்கும் விரிவடைகிறது.